Tamilnadu பொங்கல் பரிசு 2022, TN Pongal Gift 2022 List, TN Pongal Parisu 2022: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து தமிழக குடும்ப அட்டைதாரர்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஜனவரி 4ம் முதல் நியாயவிலை கடைகளில் டோக்கன் பெற்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த பதிவில் எத்தனை பொருட்கள் மற்றும் அவற்றின் அளவுகள் பற்றி பார்க்கலாம் .
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசை அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுஉள்ளார். இதன் படி 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
மேலும் படிக்க>> E Shram கார்டு ஆன்லைன் பதிவு 2022 – www.register.eshram.gov.in
Tamilnadu பொங்கல் பரிசு 2022 – TN Pongal Gift List 2022
இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய பொருட்களும் கரும்பும் இடம்பெற்றுள்ளது.
TN Pongal Parisu 2022 List
Sl.no | பொருட்கள் | அளவு |
1 | பச்சரிசி | 1 Kg |
2 | வெல்லம் | 1 Kg |
3 | முந்திரி | 50 g |
4 | திராட்சை | 50 g |
5 | ஏலக்காய் | 10 g |
6 | பாசிப்பருப்பு | 500 g |
7 | நெய், | 100 g |
8 | மஞ்சள் தூள், | 100 g |
9 | மிளகாய்த் தூள், | 100 g |
10 | மல்லித்தூள், | 100 g |
11 | கடுகு, | 100 g |
12 | சீரகம், | 100 g |
13 | மிளகு, | 50 g |
14 | புளி, | 200 g |
15 | கடலைப்பருப்பு, | 250 g |
16 | உளுத்தம்பருப்பு, | 500 g |
17 | ரவை, | 1 Kg |
18 | கோதுமை மாவு, | 1 Kg |
19 | உப்பு | 500 g |
20 | துணிப்பை | 1 Nos |
தமிழக அரசு 1088 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு இந்தப் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Pongal Gift 2022
ஜனவரி 4ம் முதல் நியாயவிலை கடைகளில் காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப தலைவர் அல்லது தலைவிகளுக்கு வினியோகிக்கப்படும். அனைவர்க்கும் பொங்கல் பரிசு கிடைக்கும் வகையில் ஜனவரி 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் நியாய விலை கடை செயல்படும். எனவே மக்கள் கொரோனவை மனதில் நினைத்து கொண்டு, சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி, ஆகியவை பயன் படுத்த வேண்டும். இந்த பொங்கல் பரிசு அனைவர்க்கும் கண்டிப்பாக கிடைக்கும், எனவே ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து பொருட்களை பெற்று கொள்ளவும். அனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.
மேலும் படிக்க >> Press Release Pdf