Tamil Nadu பொங்கல் பரிசு 2023, TN Pongal Gift 2023 List, TN Pongal Parisu list 2023: மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்த ஆண்டு 2023 காண பொங்கல் பரிசு தொகுப்பை அனைத்து தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார் இதன்படி சுமார் இரண்டு கோடிக்கும் மேல் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர் இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலை கடைகளிலும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்படுத்த உள்ளது அதன்படி ஜனவரி மாதம் முதல் நியாயவிலை கடைகளில் டோக்கன் பெற்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் தினமும் 200 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தை திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசை அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுஉள்ளார். இதற்காக தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாயுடன் ஒரு கிலோ அரிசி, சர்க்கரை உடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவுதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், இதற்காக வீடுகள் தோறும் டோக்கன்கள் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் நாளை (டிசம்பர் 27) தொடங்கவும், அதற்கான பணிகளுக்காக நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க>> E Shram கார்டு ஆன்லைன் பதிவு 2023 – www.register.eshram.gov.in
Tamil Nadu பொங்கல் பரிசு 2023 – TN Pongal Gift List 2023
கடந்த முறை 2022ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய பொருட்களும் இடம்பெற்றுள்ளன, இந்த வருடம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு ரொக்கம் Rs.1000/- மற்றும் பச்சரிசி சர்க்கரை மற்றும் இடம் பெற்றுள்ளன, இது மக்களிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது
TN Pongal Parisu 2023 List
Sl.no | பொருட்கள் | அளவு |
1 | பச்சரிசி | 1 Kg |
2 | வெல்லம் | – |
3 | ரொக்கம் | Rs.1000/- |
தமிழக அரசு 2357 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு இந்தப் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Pongal Gift 2023
ஜனவரி 4ம் முதல் நியாயவிலை கடைகளில் காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப தலைவர் அல்லது தலைவிகளுக்கு வினியோகிக்கப்படும். எனவே தற்போது புதிதாக கொரோனா பரவல் காரணமாக அனைவரும் கட்டாயமாக நியாயவிலை கடைகளில் செல்லும்போது சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி, ஆகியவை பயன் படுத்த வேண்டும். இந்த பொங்கல் பரிசு அனைவர்க்கும் கண்டிப்பாக கிடைக்கும், எனவே ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து பொருட்களை பெற்று கொள்ளவும். அனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.
மேலும் படிக்க >> Press Release Pdf