தீபாவளிக்கு இந்த தொழில் செய்தால், 100% நஷ்டம் இல்லாமல் சம்பாதிக்கலாம்

Diwali Business Ideas in Tamil- தீபாவளிக்கு இந்த தொழில் செய்தால், 100% நஷ்டம் இல்லாமல் சம்பாதிக்கலாம் – நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், தீபாவளி இன்னும் சில நாட்களில் வர உள்ளது. இந்த தீபாவளியை சீசன் ஏற்றார் போல் ஏதாவது ஒரு தொழிலை செய்து நல்ல லாபத்தை பெற இயலும், குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் அல்லது ஆண்கள் சீசனுக்கு ஏற்ற பல தொழில்களை செய்தால் 100% நஷ்டம் இல்லாமல் லாபம் பார்க்கலாம். சரி, இந்த தீபாவளிக்கு என்ன தொழில் செய்தால் நஷ்டம் இல்லாமல் நாம் சம்பாதிக்கலாம் என்பதை இந்தக் கட்டுரையில் நாம் தெளிவாக பார்க்கலாம்.

Diwali business Idea in Tamil

வரவிருக்கும் தீபாவளிக்கு வீட்டிலிருந்து குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலைப் பற்றி நாம் பார்க்கலாம். சரி குறைவான முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம் என்றால் நாம் வீட்டில் இருந்தபடியே ஒரு சிறிய ஜவுளி கடையை ஆரம்பிக்கலாம்.

ஜவுளிக்கடை என்பதும் நாம் ஒரு பெரிய கடையை வாடகைக்கு வாங்கி அதற்கான Material தனியாக இறக்குமதி செய்து பெரிய முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என எண்ணம் கண்டிப்பாக உங்களுக்கு தோன்றும். நாம் வீட்டிலிருந்தே ஒரு ஜவுளிக்கடை ஆரம்பித்தால் நாம் கடை வாடகை எதுவும் தேவையில்லை நம் அன்றாட வாழ்க்கை என்ன செய்கிறோமோ, அதனுடன் சேர்த்து அனைவரும் தெரியப் படுத்தினால் போதும் கண்டிப்பாக நாம் எந்த தொழிலில் ஜெயிக்க முடியும்.

ஜவுளிக்கடை வீட்டில் – Diwali Female Business Ideas in Tamil

சுலபமாக வீட்டிலேயே விற்கக்கூடிய ஜவுளிகள் என்றால் அனைத்து பெண்களும் விரும்பும் புடவைகள், நைட்டிகள், பாவாடைகள், ஆண்கள் விரும்பும் லுங்கிகள், துண்டுகள், போர்வைகள்.

வீட்டில் விற்கும் போது தவிர்க்க வேண்டிய ஒரு சில ஜவுளிகள் என்னவென்றால், ஆண்கள் அணியும் உள்ளாடைகள், சட்டைகள், டி-ஷர்ட் இதனை நாம் தவிர்க்க வேண்டும். முக்கியமாக குழந்தைகள் அணிய வேண்டிய துணிகளை உங்கள் areaக்கு ஏற்றால் போல் வாங்க வேண்டும். எனவே இதுபோன்று ஆடைகளை நாம் அதிகமாக வாங்குவதை தவிர்த்தல் நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

எங்கு ஜவுளிகளை வாங்கலாம்?

புடவைகளை திருச்சி, மதுரை, சேலம், போன்ற இடங்களில் குறைந்த விலைக்கு நம் வாங்க இயலும். புடவைகள் வாங்கும்போது காட்டன் புடவைகள் வாங்கினால் பெண்களை ஈர்க்க முடியும். ஆண்கள் அணியும் லுங்கிகள், துண்டுகள், போர்வைகள் இவற்றை ஈரோடு, திருப்பூர், போன்ற பகுதிகளில் வாங்கலாம்.

எவ்வளவு முதலீடு தேவைப்படும்?

குறைந்தபட்சம் உங்களிடம் ஒரு 15 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும் தாராளமாக இந்த தொழிலை நாம் தொடங்கலாம்.

வருமானம்

நீங்கள் வாங்கும் பொருளுக்கு ஏற்றார்போல் வருமானத்தை தாங்கலை முடிவு செய்து கொள்ளலாம்.

ஜவுளிகளை எப்படி விற்கலாம்

உங்கள் பகுதியில் உள்ள அக்கம்பக்கம் வீட்டில் தெரியப்படுத்தலாம். மேலும் இதற்காக என ஒரு வாட்ஸப் குழுவை ஆரம்பித்து உங்களுடைய பொருட்களை விற்க இயலும். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், போன்ற சமூக வலைதளங்களில் பகிரலாம். தரமான பொருட்களை குறைந்த விலையில் கிடைத்தால் அனைவருக்கும் வாங்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்படும் இதுவே உங்கள் வெற்றிக்கு முதல் படி.

தமிழ்நாடு அரசு குடும்ப நலத்துறை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் Rs.19500/-

AAI Jobs

Leave a Comment